மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பர்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால், மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லாறு அருகே தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், பல இடங்களில் மண்சரிவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்துமிக்க பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக இன்றும் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதைகளான மேட்டுப்பாளையம் - கோத்தகிரி, காரமடை - மஞ்சூர் மாற்றுப்பாதைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை, நிலச்சரிவு அபாயத்தினால் நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'