டி.என்.சி., குழும நிறுவனங்களின் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு
தர்மபுரி: தர்மபுரி டி.என்.சி., குழும நிறுவனங்களின் சார்பில், சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், டி.என்.சி., பியூல்ஸ் என்னும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய பெட்ரோல், டீசல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவரும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான டி.என்.சி., மணிவண்ணன் தலைமை வகித்தார். டி.என்.சி., சிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இளங்கோவன், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் தீபக், பிரேம், செயலாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், சேலம் கோட்ட தலைமை விற்பனை அலுவலர் கிரண்குமார் பெட்ரோல் பங்கை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.இதில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழாவை முன்னிட்டு, 500 ரூபாய்க்கு பெட்ரோல் மற்றும், 1,500 ரூபாய்க்கு டீசல் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு
பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி