சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
20 பேரை ஏமாற்றிய வாலிபர்; டில்லி பெண் போலீசார் கண்ணீர்
டில்லி வாலிபர் விக்ரம் தோமருக்கு, 23 வயது தான் ஆகிறது. அவரிடம் ஏமாந்தவர்கள் அனைவரும் டில்லி போலீசில் வேலை பார்க்கும் பெண் காவலர்கள். வசதி படைத்த பிசினஸ்மேன் என்று, இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகும் அவர், விலை உயர்ந்த கார்களை காட்டி அவர்களை மயக்கியிருக்கிறார்.
காரை பார்த்த ஆசையில் பெண் காவலர்களும், அவர் உண்மையான, 'பிசினஸ் மேக்னட்' என்று நம்பி விட்டனர். ஒவ்வொருவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியவர், வெவ்வேறு காரணங்களை கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார். இப்படி அவரிடம் ஏமாந்த பெண்கள் 20 பேர்; ஏமாற்றிய பணம், 24 லட்சம் ரூபாய். இந்த பெண்கள் அனைவரும், ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள்.
இந்த விவகாரம், வெளியில் பரவியதும், வலைதளங்களில் கேலி, கிண்டல் மீம்ஸ்கள் ஏராளமாக பரவி வருகின்றன. '20 பெண்கள், 24 லட்சம். இது, டேட்டிங் அல்ல; இதே வேலையாகவே இருந்திருப்பான் போல' என்கிறார், ஒருவர்.
கடைக்குள் புகுந்தது குரங்கு; கட்டி அணைத்த வீடியோ வைரல்
பழுது நீக்கும் கடை திறந்திருக்கிறது. அதன் உரிமையாளரான வாலிபர், சேரில் உட்கார்ந்திருக்கிறார். திடீரென ஒரு லங்கூர் குரங்கு கடைக்குள் வருகிறது.
டேபிளில் ஏறிய குரங்கை பார்த்ததும், சேரில் இருந்த வாலிபர் சற்று பயந்து, சாய்ந்து உட்கார்ந்தார். ஒரு சில வினாடிகள் அங்குமிங்கும் பார்த்த குரங்கு, டேபிளில் இருந்து இறங்கியது. அந்த வாலிபரின் மடியில் இடம் பார்த்து அமர்ந்து நெஞ்சோடு சேர்த்து அவரை கட்டி அணைத்துக் கொண்டது. நிமிர்ந்து பார்த்தபடி மீண்டும் கட்டி அணைத்துக் கொண்டது. ஒடிஷாவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவை சேர்ந்த சிறுமி ஸ்வரஸ்ரீக்கு வயது 3 கூட நிறையவில்லை; 2 ஆண்டுகள் 10 மாதங்களாகின்றன. இந்த சிறுமி தபேலா வாசித்து அசத்தி வருகிறார். 12 தாளங்களை சிறுமி வாசித்ததை கண்ட வலைதள பிரியர்கள், பாராட்டி புகழ்கின்றனர்.
ஒருவர், 'உத்தர கன்னடாவுக்கு பெருமையான தருணம்' என்றும், இன்னொருவர், 'இந்த சின்னஞ்சிறு தேவதையை சரஸ்வதி தேவி ஆசிர்வதித்துள்ளார்' என்றும் கமென்ட் செய்துள்ளனர். 'குழந்தையின் அற்புத செயலுக்கு ஏற்ற பெயர் வைத்த பெற்றோரை பாராட்ட வேண்டும்' என்கின்றனர், பல வலைதளவாசிகள்.
மிகக் குறைந்த வயதில் தபேலாவில், 12 தாளங்களை வாசித்த சிறுமியின் செயல், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' இதழில் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
கண்ணீரில் நன்றி சொன்னார் ஸ்கூட்டர் பெற்ற உழைப்பாளி
இலவச ஸ்கூட்டர் பெற்ற பிளிங்கிட் டெலிவரி ஏஜென்ட், கண்ணீர் மல்க அதை பெற்றுக்கொண்ட வீடியோ, 4 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது. சுஜீத் என்ற அந்த டெலிவரி ஏஜென்ட் சைக்கிளில் சென்று பொருட்களை டெலிவரி செய்து கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்டு வரவழைத்தார் வலைதள பிரபலம் ஹூசேன் மன்சூரி.
அப்படி சென்ற சுஜீத்துக்கு, ரிலையன்ஸ் இயக்குனர் ஆனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில், புது ஸ்கூட்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மும்பைக்காக கடுமையான உழைப்பை வழங்கும் மக்களுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்ததாக கூறினார், மன்சூரி. பைக் பெற்ற சுஜீத் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ, வலைதளவாசிகள் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சார், கம்பெனிக்கு ரொம்ப நஷ்டம்; கடிதம் எழுதி வைத்தார் வியாபாரி
பிளிப்கார்ட்டில் டி - சர்ட் ஆர்டர் செய்திருந்த வாடிக்கையாளருக்கு அவர் எதிர்பார்த்திருந்த பார்சல் வந்தது; கூடவே இன்னொன்றும் வந்தது. அந்த பார்சலுக்குள், அச்சிட்ட காகிதமும் இருந்தது. அதிலிருந்த வாசகம் இது தான். 'தயவு செய்து இதை திருப்பி அனுப்பி விடாதீர்கள் சார். நான் ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கிறேன். ப்ளீஸ் நோ ரிட்டர்ன்' என்று இருந்தது.
அவர் இந்த விஷயத்தை, வலைதளங்களில் பதிவிட்டார். வலைதள பிரியர்களில் ஒருவர், 'நிச்சயமாக நவராத்திரியில் பொருட்களை திருப்பி அனுப்பியதால் பாதிக்கப்பட்ட வியாபாரி தான் இப்படி எழுதியிருப்பார்' என்று கமென்ட் செய்துள்ளார். 'பிளிப்கார்ட்டுக்கும் நஷ்டம், வியாபாரிக்கும் நஷ்டம், அப்புறம் ஏன் வியாபாரம் செய்கிறார்கள்' என்று கேட்கிறார், இன்னொருவர்.
மேலும்
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
-
காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
-
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி 5 பேருக்கு பரோல்: அத்வானியை குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?
-
அச்சுறுத்தலுக்கு அடிபணியாத சவுதி; ரியாத் விமான நிலையம் மீண்டும் திறப்பு
-
தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்தது ஆர்எஸ்எஸ் ஊர்வலம்; ஒரு சிறு சலசலப்பு கூட இல்லை!
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?