தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்தது ஆர்எஸ்எஸ் ஊர்வலம்; ஒரு சிறு சலசலப்பு கூட இல்லை!

21

- நமது சிறப்பு நிருபர் -

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கிய விஜயதசமி நாளையொட்டியும், அதன், 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டியும், தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று (அக்டோபர் 25) ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சென்னை எழும்பூர், திருவொற்றியூர், கொளத்துார், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் என, 45க்கும் மேற்பட்ட இடங்களில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புகள் நடந்தன.

சில இடங்களில் கொட்டும் மழையிலும் பேரணி நடந்தது. அணிவகுப்பில் பங்கேற்றவர்களை மக்கள் மலர் துாவி வரவேற்றனர். சென்னை, எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே, நேற்று மாலை 4:00 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு தொடங்கி, ராஜரத்தினம் மைதானம் சென்று நிறைவடைந்தது. அணிவகுப்பை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ் ஆசிரியர், சுவாமி அபவர்கானந்த மஹராஜ் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
@block_Y@

சிறு சலசலப்பு கூட இல்லை!



ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில், ஐகோர்ட் வரை சென்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி பெற்றனர். தமிழகத்தில் நடந்த ஒரு ஊர்வலத்தில் கூட சிறு சலசலப்பு கூட இல்லை; அமைதியாகவும், மக்களுக்கு எந்த இடையூறு இல்லாமலும் நடந்து முடிந்தது. போக்குவரத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை. ஐகோர்ட் வரை சென்று போராடி அனுமதி பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்தி தனது செயலில் காட்டியுள்ளனர்.block_Y

Advertisement