அலறும் ஐரோப்பா! பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்
மிலன்: ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் கல்வி, வீட்டு வசதி, ஓய்வூதியம், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடக்கும் போராட்டங்கள் நேற்று தீவிரமடைந்தன; சில நகரங்களில் வன்முறை வெடித்தது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு, ஊழல் ஒழிப்பு, மலிவு விலையில் வீட்டு வசதி, ஓய்வூதிய பாதுகாப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை போராட்டங்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.




கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தணிந்த நிலையில், நேற்று முன்தினம் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
பிரான்ஸ்
பிரான்ஸ் முழுதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸ், லியோன், ரென்னெஸ், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் பட்டாசுகள், பாட்டில்கள், கற்களை வீசியதால் மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதையடுத்து, 70 ஆயிரத்து கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தேசிய அளவிலான வேலைநிறுத்தங்களை தொடரப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இத்தாலி
இத்தாலி தலைநகர் ரோமில், நேற்று நடந்த பேரணியின்போது பியாசா டெல்லா ரிபப்ளிகா என்ற பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரோமின் முக்கிய வணிகப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ரோமின் 2,000 ஆண்டு பழமையான கொலோசியம் எனும் வட்ட வடிவ கட்டடத்திற்குள் அத்துமீறி சில போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர். டூரின் நகரிலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மிலன் நகரில் நடந்த பேரணி பெரும்பாலும் அமைதியாக நடந்தது.
ஸ்பெயின்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பிளாசா டி கட்டலுானியா பகுதியில் திரண்டனர்.
கருப்பு முகமூடி அணிந்த சிலர் சாலை தடுப்புகளை தீயிட்டு எரித்ததுடன், குப்பைத் தொட்டிகளுக்கும் தீ வைத்தனர்; கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளை அடித்தனர். போலீசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர். இதில் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்களில் 25 பேர் சிறுவர்கள்.
ஸ்பெயினின் தாக்கத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலும் மலிவு விலையில் வீட்டு வசதி கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அல்பேனியா
மற்றொரு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நடந்த போராட்டமும் வன்முறையில் முடிந்தது. தலைநகர் திரானாவில் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும், கல்வித் துறையில் அரசு முதலீட்டை அதிகரிக்கவும் கோரி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது சிலர் அரசு கட்டடங்களுக்கு தீ வைத்ததுடன், போலீசார் மீது பொருட்களை வீசித் தாக்கினர்.
WANT TO SEE THIS SPREADS TO UK,US AND OTHER EURO COUNTRIES, GULF COUNTRIES, PAK, CHINA KIND OF COUNTRIES FIRST LET CHRISTIAN AND MUSLIMS FIGHT EACH OTHER AND BOTH ARE REMOVED
ஒரே ஆள்தான் காரணம்... சோர்ஸ்ஐ போட்டு தள்ளினால் போதும்... நவீன உலகின் அரக்கன் அவன்தான்
THE SECOND IS CONVERSION TERRORIST BOTH SHOULD BE ELIMINATED.
ஐநா எங்கே இருக்கிறார்கள்.கண்டண அறிக்கை எதுவும் இல்லை. ஒகோ கலவரம் நடக்கும் இடம் ஐரோப்பாவா
உலகம் முழுவதும் கம்யூனிச-நக்சல்-மூர்க்க பிணைப்பு ஆபத்தானதாக மாறி வருகிறது ....
சவுதி,யூ.ஏ.இ மாதிரியான நாடுகள் என்றைக்காவது பிற நாட்டினருக்கு அடைக்கலம் கொடுக்கிறதா? வருபவர்கள் அனைவருக்கும் கதவைத் திறந்து வைத்தால் கடைசியில் இப்படித்தான் நடக்கும்.
நீ மூர்க்கன் ulle vitta இதன் gathi
Europinistan
ஸ்பெயின் ல யாரையும் கட்டி புடிக்கலையே?
appavi.. உனக்கு தண்ட சோறு தான்மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி