வடகிழக்கு பருவ மழையில் பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை யோசனை
ஈரோடு:ஈரோடு, தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறுவடைக்கு
தயாராக உள்ள தோட்டங்களில் அறுவடை செய்தும், மரங்களை கவாத்து செய்து
மரத்தின் சுமையை குறைத்து காற்றால் சேதத்தை தவிர்க்கலாம்.
கனமழையின்போது ஏற்படும் மழை நீர் தேக்கத்தை குறைக்க, உபரி நீர்
வடிந்த பின் நடவு, விதைப்பு பணி செய்யலாம். வடிகால் வசதியற்ற
நிலங்களில், வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேங்குவதை
தவிர்க்கலாம்.
காற்றால் ஏற்படும் சேதம் தவிர்க்க, காற்று வீசும்
திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுக்கலாம். மழை நீர்
வடிந்த பின், பயிருக்கு ஏற்ப மேலுரம் இட்டு, மண் அணைக்க வேண்டும். இலை வழி
உரமிட்டு பயிரின் ஊட்டச்சத்து தேவையை சரி செய்யலாம்.
தாங்கு குச்சி கட்ட வேண்டும்
பசுமை
குடிலின் அடிப்பாகம் பலமாக, நிலத்துடன் இணைப்பு கம்பியை இணைத்து உறுதி
செய்யலாம். பசுமை குடிலின் உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதி
இல்லாததை உறுதி செய்து, கதவுகள், ஜன்னல்கள் பத்திரமாக மூட வேண்டும்.
மா மரத்தில் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றி, மரத்தின்
அடிப்பகுதியில் மண் அணைத்து, குவித்து உரிய வடிகால் வசதி செய்து, நோய்
தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். சிறிய செடிகளை காற்றால்
பாதிக்காதபடி தாங்கு குச்சி கட்ட வேண்டும்.
நோய் தடுப்பு மருந்து
கொய்யா
செடியை கவாத்து செய்து, பூஞ்சாண நோய்களை தடுக்க நோய் தடுப்பு மருந்து
தெளிக்கலாம். நல்ல மிளகு செடிகளில், பூஞ்சாண நோய்களை தடுக்க
சூடோமோனாஸ் தெளிக்க வேண்டும். டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ்
பூஞ்சாண உயிரியல் கொல்லிகளை நிலத்தில் தெளித்து, செடிகளை கட்டிவிட
வேண்டும்.
காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும்
வாழை மரத்தை சவுக்கு,
யூகலிப்டஸ் கம்புகள் ஊன்றியும், வாழைத்தாரை முறையாக மூடி, 75
சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தாரை அறுவடை செய்யலாம். காய்கறிகளில்
தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, வெங்காய செடிகளில் வடிகால் வசதி
செய்து, ஊன்று கோல் கொடுத்து, நோய் தடுப்பு மருந்து தெளித்து, உயிரியல்
கொல்லிகளை தெளித்திட வேண்டும். மரவள்ளி, மஞ்சள் செடிக்கும் வடிகால்
வசதியுடன், செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில்
மண் குவிக்க வேண்டும். பந்தல் காய்கறி, சம்பங்கி, செண்டுமல்லி, சாமந்தி
உள்ளிட்ட பூ செடிகளில் நோய் தடுப்பு மருந்து தெளித்து, காய்ந்த இலைகளை
அகற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி