போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

கோபி:குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், போதை பழக்க வழக்கத்தை தடுப்பது குறித்து, ரீட் அமைப்பு சார்பில், கோபி அருகே அளுக்குளியில், பைக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ரீட் நிறுவன இயக்குனர் கருப்புசாமி தலைமை வகித்தார். கோபி அருகே அளுக்குளி பஸ் ஸ்டாப்பில் துவங்கிய ஊர்வலம், கவுண்டம்பாளையம், ஒட்டர் கரட்டுப்பாளையம் வழியாக, குருமந்துாரில் நிறைவடைந்தது. கள ஒருங்கிணைப்பாளர் நந்தினி வரவேற்றார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி கூறினார்.

Advertisement