வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
@block_B@ஜெ.ஷீலா, காரைக்கால்:
உ.பி.,யில் சென்ற தேர்தலில், ரெண்டே தொகுதியில் வென்ற காங்கிரஸ், '2027 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்' எனச் சொல்கிறதே... நடக்குமா?
block_B
இந்த முறை காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், பல தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை!
@block_Y@வி.ராஜகோபாலன், சென்னை:
வெற்றி பயணம் திட்டத்தால் பெண்கள், எந்த பஸ்களிலும் ஏறலாம் என்பதால், பல பெண்களும், பொருட்களை வாங்க உள்ளூரில் உள்ள கடைகளை விட்டு விட்டு, மொத்த விலை கடைகளை தேடி நகரங்களுக்கு செல்கின்றனராம். இதனால், செலவு மிச்சமாகிறதாம். இப்படி செய்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?
block_Y
கர்நாடகாவில் ஒரு நபர், 'இலவச பஸ் திட்டத்தால் என் மனைவி வீட்டில் இருப்பதே இல்லை; நான் மிகவும் பாதிக்கப்படுகிறேன். அதனால், இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை, பஸ் டயர் முன்னேயே படுத்து, தர்ணாவில் ஈடுபடுவேன்...' என்று, படுத்துவிட்டார். அதுபோல், தமிழகத்திலும் ஆகாமல் இருந்தால் சரி!
@block_P@அ.ரவீந்திரன், கன்னியாகுமரி:
'பெரியார் அறிவுலகம்' என்ற நுாலகம், தமிழகத்திற்கு அவசியமா?
block_P
இத்தகைய அறிவுசார் அரங்குகள், கட்டாயம் தேவை. இவற்றிலிருந்து, மாணவர்கள் மட்டுமல்ல; பொதுமக்களும் நிறைய புது தகவல்களைக் கற்க முடியும்!
@block_G@ச.ஷகீலா பானு, துாத்துக்குடி:
'சட்டம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள், நீதியை உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வலியுறுத்தி உள்ளாரே?
block_G
சட்டம் பயில்பவர்களின் அடிப்படை கடமையே அது தானே... ஆனால் சிலர், தடம் புரண்டு போவதால், இப்படிப்பட்ட கருத்தை, இளம் மாணவர்கள் மனதில் நன்கு பதியும் வகையில் சொல்லி இருக்கிறார், நீதிபதி!
@block_B@வி.கவுதம் சித்தார்த், விழுப்புரம்:
'நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும், பறிபோகும் உரிமைகளை மீட்கவும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...' என்கிறாரே, கன்னட மற்றும் தமிழ் நடிகர் பிரகாஷ் ராஜ்?
block_B
நான்கு மாநிலங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் உலா வந்த பிரகாஷ் ராஜை, சிறப்பு வாக்காளர் பட்டியல் காட்டிக் கொடுத்து விட்டதல்லவா... இப்படியும் பேசுவார்; இன்னும் பேசுவார்!
@block_Y@ஜெ.ரவிக்குமார், திருப்பூர்:
ஸ்டாலின் மீது உள்ள பாசம், திருமாவளவனுக்கு இன்னும் விடவில்லையா?
block_Y
திருமாவளவனை ஆட்டிப் படைப்பது, ஸ்டாலின் பாசம் இல்லை, ஜெயகுமார்... பதவி ஆசை!
அந்துமணி சார்!அண்மையில் பார்த்து ரசித்த ஒரு காமெடி ரீல். துவைத்த துணியை மழை பெய்வதால் தன் வீட்டில் காய வைக்க முடியாமல் தாய் வீட்டில் வெயில் அடிப்பதை போனில் கேட்டு நைட்டியுடன் வாளியில் துவைத்த துணியை எடுத்துக் கொண்டு இலவச பஸ் ஏறி தாய் வீட்டில் துணியை காய வைத்து மீண்டும் இலவச பஸ் ஏறி தன் வீடு திரும்புகிறாள் ஒரு பெண். பார்த்தது கற்பனை ரீல்தான் என்றாலும் இது நிஜத்தில் நடக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை.
நடிகர் பிரகாஷ்ராஜ் போன்ற
தேச துரோகி விரோதிகளை
வெளியில் நடமாட விட்டு
வைத்திருப்பதால் துணிச்சலாக தப்புகளை பண்ணுகிறார்கள்....இவர்களை தண்டிப்பது யார்...
அறிவுலகம்தான் தேவை. பெரியார் தேவையில்லை.மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி