மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் உறவினர்கள் காத்திருப்பதாக செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து எக்ஸ் தளத்தில் அதிகாரி பேசும் வீடியோவுடன் பதிவு போட்டுள்ளார். அதில், "தவறான தகவல். மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மயானத்தின் உட்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் ஊழியர் சரிசெய்ய தாமதமானது. ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். உட்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் மின்வாரிய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி