கல்வெர்ட் இணைப்பு சாலையால் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில், கல்வெர்ட் இணைப்பு சாலை சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட விராட்டிக்குப்பம் பாதை, பாபாநகர் பகுதியில் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கான பிரதான சாலையில், வாய்க்கால் கல்வெர்ட் உள்ளது. இதனுடன் இணையும் சாலை சேதமடைந்து போனதால், அந்த குடியிருப்புகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுச் செல்கின்றனர். சாலைக்கும் கல்வெர்ட்டிற்கும் இடையே உயரமாகிவிட்டதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கடந்த 6 மாத காலமாக இந்த சேதமடைந்த கல்வெர்ட் இணைக்கும் சாலை சீர்படுத்தாமல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement