மினி வேன் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதல்: புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா வேன் அடுத்தடுத்து நான்கு வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுாரை சேர்ந்த நண்பர்கள் குழுவினர் இன்று (அக்.,27) மினி வேனில் (டிஎன்.25.டி.9506) புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். பின் அவர்கள் ஊர் திரும்புவதற்காக ராஜிவ் சிக்னலில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றனர். அப்போது தட்டாஞ்சாவடி அருகில் வந்தபோது, தொழிற்பேட்டையில் இருந்து வந்த ஆட்டோ மீது முதலில் மோதியது. தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஸ்கூட்டர்கள், மற்றொரு ஆட்டோ மீது மோதி, சென்டர் மீடியனில் மோதி நின்றது.
தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் ஸ்கூட்டரில் வந்த சண்முகாபுரம் மணிகண்டன் மகன் வெங்கடேசனுக்கு இரண்டு தோல்பட்டைகளிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒரு ஆட்டோவில் வந்த பள்ளி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். மற்றொரு ஆட்டோ டிரைவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிந்த போக்குவரத்து போலீசார் மினிவேனை ஓட்டிவந்த திருவண்ணாமலையை சேர்ந்த பழனி மகன் அன்பரசன்,26; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
வீட்டில் பணிக்கு சேர்ந்த 2ம் நாள் 10 பவுன் திருடிய பெண் சிக்கினார்
-
வடமாநில இளைஞர்களை கொத்தடிமைகளாக துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
-
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி மாஜி அமைச்சரின் உதவியாளருக்கு சிறை
-
மன்றாடிய அரசு பஸ் டிரைவர் மனிதநேயம் மறந்த மேலாளர்
-
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஆங்கில வாசிப்புத் திறன் போட்டி: 210 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
-
வாராந்திர சிறப்பு பஸ் இயக்கம் குறைப்பு