மருத்துவ கருத்தரங்கு

சின்னாளபட்டி: இந்திய சிறப்பு பொது மருத்துவர்கள் சங்கம் சார்பில் ‘லைப் கான் 2026’ சர்க்கரை, உடல் பருமன், இதய நோய்கள் குறித்த பிள்ளையார்நத்தத்தில் கருத்தரங்கம் நடந்தது. டாக்டர் மதிச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிளை தலைவர் பிரின்ஸ் பயாஸ், செயலாளர் குணசேகரன், பொருளாளர் அழகு வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கணேஷ் வரவேற்றார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சரவணன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட பல பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற முதுநிலை மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. பாண்டிச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி பேராசிரியர் சுரேஷ், மதுரை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் பாலமுருகன், சென்னை மருத்துவக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ஹரிஹரன் பரிசுகள் வழங்கினர். டாக்டர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

டாக்டர்கள் முரளிதரன், வினோதன், சரண் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement