விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் வட்டாரம் கொழை கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கண்ணன், சத்யநாராயணன், சிவசங்கர் ஆகியோர் மண்வளம் பாதுகாப்பு, உர பரிந்துரை, அதிக உரங்களால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது.

மேலும், உயிர் உரங்கள், பசுந்தாள் மற்றும் தொழு உரங்களை அதிகரிப்பதால் மண்ணில் பேரூட்டம், நுண்ணுாட்டச் சத்துகள் மேம்பாடு, மண்வள அட்டையில் பரிந்துரைத்த அளவில் உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

பரங்கிப்பேட்டை வட்டாரம் சேந்தரகிள்ளை, மேல்புவனகிரி வட்டாரம் சாத்தப்பாடி கிராமங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

Advertisement