சுவையான ஆப்பிள் ரப்டி தயாரிப்பது எப்படி?
ரப்டி அல்லது ரப்ரி என்பது பாரம்பரிய வட இந்திய இனிப்பு வகை. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிறது. இந்த சுவையான ஆப்பிள் ரப்டி ஆப்பிள், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் பாதாம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை டின்னருக்கு முன்னால் சாப்பிடும் ஸ்வீட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? இப்பவே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்து உங்க மனசுக்கு பிடித்தவர்களோடு சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
முதன்மை உணவிற்கு
தேவையான அளவு சர்க்கரை
தேவையான அளவு பாதாம்
தேவையான அளவு ஏலக்காய்
1 ஆப்பிள்
750 மில்லி லிட்டர் முழு கொழுப்புள்ள பால்
செய்முறை
ஆப்பிளை தோல் சீவி பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள். ஒரு பேனில் பாலை ஊற்றி அது பாதியாக சுண்டும் வரைக்கும் கொதிக்க விடுங்க.
இப்போது துருவிய ஆப்பிளை பாலில் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்க. இந்த கட்டத்தில் சர்க்கரையைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் வேகவிடுங்க. பிறகு ஏலக்காய் தூளைச் சேர்த்து நல்லா கலக்குங்க. இப்போது சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்குன பாதாம் முந்திரி துண்டுகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து இறக்குங்க.
சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி பரிமாறுங்க.
மேலும்
-
விழுப்புரம் அருகே சேவல் சண்டை
-
கிராம சபைக் கூட்டத்தில் சேர்ப்பு...
-
கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் படுகாயம்
-
இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி விடுதலை நாள் விழா
-
ஆலோசனைக் குழுவில் த.வெ.க., எம்.எல்.ஏ.,
-
30 சிறப்பு நீதிமன்றங்கள்! பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க... வழக்குகளை துரிதமாக முடிக்குமாறு முதல்வர் விஜய் உத்தரவு