ஓய்வூதியர்கள் சங்கம் கடலுாரில் தர்ணா
கடலுார்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணா இயக்கம் கடலுாரில் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் 16 அம்ச கோரிக்களை வலியுறுத்தி கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு தர்ணா நடந்தது. மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்,. மாவட்ட இணை செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், ஜமுனா, தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் காசிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் பேசினர். அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் புருேஷாத்தமன் தர்ணாவை முடித்து வைத்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement