மாணவர்களே உஷார்...! நாடு முழுவதும் 32 போலி பல்கலைக்கழகங்கள்!

1

பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி, அவ்வப்போது நாடு முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வரும். அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பு ஒன்றை யுஜிசி வெளியிட்டு உள்ளது.

யுஜிசி சட்டப்படி, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்றவற்றிற்கு செல்லாது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 32 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுவது அடையாளம் காணப்பட்டு உள்ளன.

முதலிடத்தில் தலைநகர் டில்லி உள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 12 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 4 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலா 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆந்திராவில் 3, புதுச்சேரியில் (உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீபோதி உயர்கல்வி அகாடமி) 2 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளன.

மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா (சர்வதேச இஸ்லாமிய நபித்துவ மருத்துவப் பல்கலை, புனித ஜான் பல்கலைக்கழகம்), மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 கல்வி நிறுவனங்களும், ஹரியானா, ஜார்க்கண்டில் தலா ஒரு கல்வி நிறுவனமும் போலியாக இயங்கி வருகின்றன.

Advertisement