மருத்துவ திட்டத்தில் 25 ஆண்டு சேவை: ஊழியர்களுக்கு கவுரவம்
சென்னை: சென்னை கே.கே.ஆர்., காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையுடன் இணைந்து, ‘அட்வான்ஸ் பயோனிக்ஸ்’ நிறுவனம், 25 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும், ‘காக்லியர் இம்ப்ளான்ட்’ எனும் காதுக்குள் செவித்திறன் மேம்படுத்தும் கருவி பொருத்தும் சேவையில் பணிபுரிவோருக்கு, விருது வழங்கப்பட்டது.
காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக கே.கே.ஆர்., மருத்துவமனை உள்ளது.
இம்மருத்துவமனை, ஏ.பி., என அழைக்கப்படும் ‘அட்வான்ஸ்டு பயோனிக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, காது கேளாதோருக்கு பயனளிக்கும் வகையில் ‘காக்லியர் இம்ப்ளான்ட்’ திட்ட சிகிச்சையை, 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இச்சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக இருப்போரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, எழும்பூர் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நேற்று நடந்தது.
இத்திட்டத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்று, விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கே.கே.ஆர்.மருத்துவமனை நிறுவனர் ராமலிங்கம், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ரவி ராமலிங்கம், ‘அட்வான்ஸ்டு பயோனிக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் நாதிக் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பணம் கேட்டு அக்காவை மிரட்டிய தம்பி கைது
-
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறனறி தேசிய தொழிற்சான்று வழங்கல்
-
நீருயிரி மையத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி
-
10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
-
ஜி.எஸ்.டி., அணிகள் பங்கேற்ற 'நட்புறவு கிரிக்கெட் போட்டி'
-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் டூவீலர் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி