உலக கோப்பையில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டு 'டிரா' செய்தது கேப்வெர்டே!
அட்லாண்டா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'எச்' பிரிவு ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை, ஆப்ரிக்காவின் கேப்வெர்டே அணி, 0-0 என சமன் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. கேப்வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா( 40 வயது) அசைக்க முடியாத சுவராக நின்று ஸ்பெயினின் கோல் முயற்சிகளை முறியடித்தார்.
அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியது முதலே, பந்தை 74 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் அணி, கேப்வெர்டே கோல் பகுதியை முற்றுகையிட்டது. ஆனால், கேப்வெர்டே அணியின் தற்காப்பு ஆட்டம் மற்றும் கோல்கீப்பரின் அசாத்திய செயல்பாடு, ஸ்பெயினின் கோல் போடும் முயற்சிக்கு தடையாக இருந்தது
அசத்திய கோல் கீப்பர்:
முதல் பாதியில் ஸ்பெயின் அணியின் பெரான் டோரஸ், அய்மெரிக் லபோர்ட், ஒயர்சாபல் ஆகியோர் கோல் நோக்கி அடித்த பந்துகளை, கேப்வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா மிக லாவகமாக தடுத்தார். முதல் பாதி முடிவு 0-0 என சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியிலும், ஸ்பெயினின் நட்சத்திர இளம் வீரர் லமின் யமால் அடுத்தடுத்து கோல் போட எடுத்த முயற்சிகளை, வோசின்ஹா தடுத்து நிறுத்தினார். ஆட்டநேர முடிவில், இரு அணிகளும் கோல் போடாததால், போட்டி 0-0 என 'டிரா' ஆனது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றன.
சோம்பேறி ஆட்டமான கிரிக்கெட் மோகத்தை விடுத்து கால்பந்து ஆட்டத்தில் இந்தியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அரசும் ஊக்குவிக்க வேண்டும்
நீங்கள் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
கிரிக்கெட் சோம்பேறி ஆட்டம் என்று சொன்னது அந்த காலத்தில், சுனில் கவாஸ்கர் 60 ஓவர் ஆட்டமிழக்காமல் விளையாடி 36 ஓட்டம் எடுத்தாரே, 1975ம் ஆண்டு உலக கோப்பையில்.
i watched this match. yes. superb matchமேலும் செய்திகள்
-
ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!
-
அசத்திய இளம் வீரர்கள்! போஸ்னியாவை துவம்சம் செய்தது ஸ்விட்சர்லாந்து
-
தென் ஆப்ரிக்கா-செக்குடியரசு 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'