கடைசி 4 நிமிடத்தில் நடந்த டுவிஸ்ட்; பெல்ஜியம் - எகிப்து ஆட்டம் டிரா

3

நியூ ஜெர்சி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'எப்' பிரிவு ஆட்டத்தில், எகிப்து அணி வெற்றி பெறுவதைத் தடுத்து நிறுத்திய பெல்ஜியம், 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தை டிரா செய்தது. கடைசி 4 நிமிடத்தில், லோயிஸ் ஒபெண்டா அடித்த கோல் பெல்ஜியத்தைக் தோல்வியிலிருந்து காப்பாற்றியது.

​அமெரிக்காவின் மெட்லைப் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், எகிப்து அணியின் கேப்டன் முகமது சலா தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் களம் இறங்கினார். ஆட்டம் தொடங்கிய முதலே பெல்ஜியம் அணி பந்தை அதிகம் கட்டுப்படுத்தினாலும், எகிப்தின் தற்காப்பு அரணை உடைக்க திணறியது.

​ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் எகிப்தின் முஸ்தபா முகமது, சலா உதவியுடன் கோல் அடித்து, அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெல்ஜியம் அணி பதில் கோல் அடிக்க தீவிரமாகப் போராடியது. ​முதல் பாதி ஆட்டத்தில் எகிப்து 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் எகிப்து அணியின் தற்காப்பு பலமாக இருந்ததால், பெல்ஜியம் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை. ​தோல்வியின் விளிம்பில் இருந்த பெல்ஜியம் அணிக்கு, ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அநத் அணியின் லோயிஸ் ஒபெண்டா கோல் அடித்து, பெல்ஜியம் ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்., கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும், மேலும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.


@block_B@

சவுதி அரேபியா - உருகுவே ஆட்டம் டிரா


மற்றொரு லீக் போட்டியில், எச் பிரிவில் இடம் பெற்ற, சவுதி அரேபியா - உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியும் டிராவில் முடிந்தது. சவுதி அரேபியாவின் அல் அம்ரி, 41வது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்து, முன்னிலையை உருவாக்கினார். இதற்கு பதிலடி தர உருகுவே எடுத்த முயற்சி, 80வது நிமிடத்தில் கைகூடியது. அந்த அணியின் மெக்ஸிமிலேனோ கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.block_B