உலகக் கோப்பை கால்பந்து: ஈரான்- நியூசிலாந்து ஆட்டம் டிரா
நமது நிருபர்
ஈரான் - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜி' பிரிவில் இன்று நடந்த லீக் போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் நியூசிலாந்தை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு 32வது நிமிடத்தில் ராமின் ரெஸாயியன் அடித்த கோலின் மூலம் ஈரான் 1-1 என சமன் செய்தது. இதனால் முதல் பாதி சமநிலையுடன் நிறைவடைந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி நடந்தது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் நியூசிலாந்து மீண்டும் முன்னிலை பெற்றது.
இதனால் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து 64வது நிமிடத்தில் முகம்மது மொஹேபி கோல் அடித்தார். இதனால் ஈரான் மீண்டும் சமன் செய்தது. இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடித்து வெற்றி பெற கடும் முயற்சி செய்தது. ஆனால் ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பிரத்யேக இணையதளம் பக்கம்!
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமலர் வெப்சைட்டில் பிரத்யேகமாக, வண்ண வண்ண நிறத்தில் இணையதளம் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் செய்திகளை உடனுக்குடன் படிக்கலாம்.
படிக்க, இங்கே கிளிக் செய்யவும்
விஸா கொடுப்பதற்கு இழுத்தடித்து ......விளையாடும் நாளுக்கு மட்டும் விஸா கொடுத்து ....ஆனாலும் தனது திறமையை நிரூபித்து ருக்கு ஈரான் அணி
முதன்முதலாக வேலுபிள்ளை தமிழர் ஆஸ்திரேலியா அணியில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதை பெருமையாக கருதுவோம்
வேலுப்பிள்ளையின் பூர்வீக பின்னணியை ஆராய்ந்து பெரியார் கலைஞரின் திராவிடத்தோடு எப்படி முடிச்சுப்போடுவது என்று ஒரு கும்பல் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும்
ஈரானின் போர் நடந்து கொண்டு இருந்தாலும் விளையாட்டில் சிறப்பாக கவனம் செலுத்து வீரர்களுக்கு வாழ்த்துக்கள்மேலும் செய்திகள்
-
ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!
-
அசத்திய இளம் வீரர்கள்! போஸ்னியாவை துவம்சம் செய்தது ஸ்விட்சர்லாந்து
-
தென் ஆப்ரிக்கா-செக்குடியரசு 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'