உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்
நமது நிருபர்
மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகளுக்கு இடையே இன்று (ஜூன் 19) போட்டி நடந்தது. முதல்பாதியில் கடும் முயற்சிகள் செய்தும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.2வது பாதியில் மெக்சிகோ அணி 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
இதைத்தொடர்ந்து மெக்சிகோ வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தென்கொரியா அணியால் சமநிலை கோலை அடிக்க முடியவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2வது வெற்றியை பெற்று மெக்சிகோ அணி, குரூப்-ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
மெக்சிகோ பெரிய அணி தென்கொரியாவை எளிதில் வீழ்த்தி விடும்மேலும் செய்திகள்
-
ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!
-
அசத்திய இளம் வீரர்கள்! போஸ்னியாவை துவம்சம் செய்தது ஸ்விட்சர்லாந்து
-
தென் ஆப்ரிக்கா-செக்குடியரசு 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'