போதாத விழிப்புணர்வு

பள்ளி, கல்லுாரிகளில் ஏற்படுத்தப்படும் போதை விழிப்புணர்வு என்பது பெயரளவுக்கு தான் உள்ளது. அதிலும், ஏதேனும் ஒரு சமூக, தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து நடத்துவதால், அன்றைய நாளுடன் அவை கடந்து விடுகிறது.

போதையில் ஏதேனும் பாதித்தவர், அல்லது குடும்பத்தை இழந்தவர் பேசுவது விழிப்புணர்வாக அமையும்.

இனி, உங்கள் குடும்பத்தில் யாரெனும் இருந்தால், அவர்களை மாற்ற நீங்கள் முயற்சியுங்கள் என்பது போல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்; அதை விடுத்து, பெயரளவுக்கு நடப்பதால், விழிப்புணர்வு முழுமையாக சென்று சேருவதில்லை.

ஆரோக்கியம் மேம்பட வேண்டியது கல்லுாரி பருவத்தில் தான். ஆனால், விரக்தி அடைந்து மது அருந்தும் அளவுக்கு, கல்லுாரியில் படிப்பவருக்கு என்ன நேர்ந்து விட்டது, என்பதையும் கவனிக்க வேண்டும்.

Advertisement