ஹிந்து விரோதிகளுக்கே தி.மு.க.,வில் பதவி: ராஜா

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற 'பில்டப்' அதிக நாட்களாக நடந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து தலைமை பொறுப்பு யாருக்கும் கிடைக்காது என்பதை, துணை முதல்வர் பதவி மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறது. தி.மு.க.,வில், 70 ஆண்டுகள் பணியாற்றினாலும் தலைமை பொறுப்பில் இடம் கிடையாது.


திண்டுக்கல் மாவட்டம், பழநி அனைத்துலக முருகன் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, 'இது ஆன்மிக மாநாடு இல்லை' என்றார். இவர்கள் முருகனை மட்டுமின்றி, ஹிந்து மதத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க.,வில் ஹிந்து விரோதிகளுக்கு தான் தலைமை பதவி. நிபந்தனை ஜாமினில் வந்துள்ள செந்தில்பாலாஜி, 'அரசு வேலைக்கு பணம் வாங்கினேன்' என அவரே ஒப்புக் கொண்ட பின்னும், அவருக்கு தண்டனை இல்லை. வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.



தேர்தலுக்கு முன், செந்தில்பாலாஜியை ஊழல்வாதி என பிரகடனப்படுத்திய ஸ்டாலின், இன்றைக்கு 'தியாகி' என்கிறார். தியாகி என்றால், அவருக்கு முதல்வர் பதவியையோ, துணை முதல்வர் பதவியையோ வழங்கி இருக்கலாமே.

எச்.ராஜா, தமிழக பா.ஜ.,

ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்

Advertisement