'உதயநிதிக்கு அறிவுரை தேவை இல்லை'

6

சென்னை: “உதயநிதிக்கு அறிவுரை தேவையில்லை,” என கனிமொழி எம்.பி., கூறினார்.

அவரது பேட்டி:



துணை முதல்வராக யாரை தேர்வு செய்வது என, முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில், உதயநிதியை அவர் தேர்வு செய்துள்ளார். அவருக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை. இந்த காலத்தில் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உதயநிதி பொறுப்பை உணர்ந்து, சிறப்பாக செயல்பட என் வாழ்த்துகள்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

வி.சி., பொதுச்செயலர் ரவிகுமார் பேட்டி:

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றுள்ளார். இது, குடும்ப பதவி என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. திறமை, செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில் மட்டும், ஒரே குடும்பத்தில் பலர் பதவியில் இருப்பது போல் பேசுகின்றனர். பா.ஜ., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியிலும் இந்த நடைமுறை உள்ளது. இதே குற்றச்சாட்டை, இன்றைய முதல்வர் மீதும் வைத்தனர். அதேபோல், குற்றம்சாட்டுவோருக்கு தன் செயல்பாடுகளால் உதயநிதி பதில் அளிப்பார்.

கோவி.செழியனுக்கு, உயர்கல்வி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் என்பதாலேயே அவருக்கு அப்பதவி வழங்கப்பட்டது என பார்க்கக் கூடாது. அவர் திறமையாக செயல்பட்டு நன்மதிப்பை பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement