கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு

வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாக, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் நடந்தது. தொழிற்சங்க பொதுசெயலாளர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில், வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்டு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தலா 3 சென்ட் வீதம் இடம் வழங்க வேண்டும்.

பணி நிறைவு பெற்ற தொழிலாளர்களுக்கு வால்பாறை நகரில், இலவச வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி, விரைவில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது. வனவிலங்கு - மனித மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement