உதயநிதி துணை முதல்வர் தி.மு.க., கொண்டாட்டம்

கடலுார்: தமிழக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கியதையொட்டி, கடலுார் தி.மு.க., வினர் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்குவதை வரவேற்று, கடலுார் மேயர் சுந்தரி ராஜா முன்னிலையில், மாநகர செயலாளர் ராஜா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாணவரணி பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement