துாத்துக்குடி, நீலகிரியில் கொட்டியது கனமழை; வீடு இடிந்து ஆசிரியை மண்ணில் புதைந்த பரிதாபம்

சென்னை: துாத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டியது. நீலகிரியில் வீடு இடிந்த சம்பவத்தில், ஆசிரியை ஒருவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.


தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழைப்பொழிவு இருந்தது. தென் மாவட்டங்களில், குறிப்பாக நீலகிரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு இருந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கன மழையால் மண்சரிவு ஏற்பட்ட போது வீட்டின் கதவை திறந்த ஆசிரியை விஜயலட்சுமி என்பவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.

Latest Tamil News

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்:


காயல்பட்டினம் 9.3 செ.மீ.,


துாத்துக்குடி விமான நிலையம் 7.2 செ.மீ.,


கோத்தகிரி 7.2 செ.மீ.,


கருப்பா நதி அணை 6.7 செ.மீ.,


கயத்தார் 6.7 செ.மீ.,


மணியாச்சி 6.5 செ.மீ.,


ஸ்ரீவைகுண்டம் 6.4 செ.மீ.,


திருநெல்வேலி 6.2 செ.மீ.,


குன்னுார் 6.2 செ.மீ.,


பில்லுார் அணை 6 செ.மீ.,


திருச்செந்துார் 5.5 செ.மீ.,


கெத்தி 5.3 செ.மீ.,


பில்லிமலை எஸ்டேட் 5.3 செ.மீ.,


கோடநாடு 4.8 செ.மீ.,


செங்கோட்டை 4.8 செ.மீ.,


குண்டாறு அணை 4.6 செ.மீ.,


ஒட்டப்பிடாரம் 4.6 செ.மீ.,


கொடைக்கானல் போட்கிளப் 4.6 செ.மீ.,


தென்காசி 4 செ.மீ.,


அடவிநயினார் கோவில் அணை 3.5 செ.மீ.,


ஊட்டி 3.2 செ.மீ.,


ஸ்ரீவில்லிபுத்துார் 2.8 செ.மீ.,


ஆண்டிப்பட்டி 2.5 செ.மீ.,


ராதாபுரம் 2 செ.மீ.,


மணிமுத்தாறு அணை 2 செ.மீ.,


கொடிவேரி 1.8 செ.மீ.,


சாத்தான்குளம் 1.6 செ.மீ.,


சத்தியமங்கலம் 1.3 செ.மீ.,


பாளையங்கோட்டை: 8.4 செ.மீ.,


திருநெல்வேலி : 4.9 செ.மீ.,


அம்பாசமுத்திரம் : 4 செ.மீ.,


பாபநாசம் : 4 செ.மீ.,


15 மாவட்டங்களில் மழைக்கு வார்னிங்! நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களிலும், காரைக்குடியில் ஒரு சில பகுதிகளிலும் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement