தாமதமானதால் அடிக்கப் பாய்ந்த பயணிகள்; விமானப் பணிப்பெண்களின் செயலுக்கு குவியும் பாராட்டு

7

மும்பை: இண்டிகோ விமானம் தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமான ஊழியர்களிடம் சில பயணிகள் ஆவேசமாக சத்தம் போட்டு, சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இண்டிகோ விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


இதனால், கடுப்பான பயணிகள் விமானப் பணிப் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், மிகவும் ஆவேசமாக சத்தம் போட்ட ஒருவர், குழந்தைகளுடன் 5 மணிநேரம் காத்திருப்பதாகவும், இப்போது நாங்கள் என்ன செய்வது? என்று ஆக்ரோஷமாக கேட்டுள்ளார்.


சில பெண் பயணிகளோ, "நீங்கள் எங்கள் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். அனைத்து விமானங்களும் புறப்பட்ட நிலையில், உங்கள் விமானம் மட்டும் கிளம்பவில்லை," என்று கேள்வி எழுப்பினர்.


பயணிகள் ஆவேசமாக, தங்களை அடிப்பது போல வந்து கேள்விகளை எழுப்பிய போதும், இண்டிகோ விமானப் பணிப் பெண்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து, அமைதியுடன், பொறுமையாக பயணிகளின் சந்தேகங்களும், கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த செயல்கள் நெட்டிசன்களை பாராட்டுக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், இதுபோன்று பயணிகள் நடந்து கொள்வதால், தீர்வு கிடைத்து விடப் போவதில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement