ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (15)

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

'பில் டூ ஷிப் டூ' பிரச்னை அதிகாரிகளுக்காவது புரிதல் உண்டா?



இவே பி, இ-இன்வாய்ஸ் போர்ட்ட லில் இருந்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டும் ஓ.டி.பி., வருகிறது. சம்பந்தப்பட்ட நபர், வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால், ஓ.டி.பி.,யை பயன் படுத்த முடியாத சூழல் உருவாகிறது. எனவே, மின்னஞ்சலுக்கும் சேர்த்து அல்லது மாற்று எண்ணுக்கு ஓ.டி.பி., வரும் வகையில் மாற்றம் செய்யும் வசதி வேண்டும். நாங்கள் திருச்சியில் ஸ்டீல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகி றோம். சென்னையில் இருக்கும் நிறு வனத்திடம் இருந்து நாங்கள் பொருள் வாங்கி, திருச்சி கொண்டு வந்து, அங்கிருந்து தேவைப்படுவோருக்கு அனுப்புகிறோம்.

திருச்சியில் இருந்து அனுப்பும் போது, எங்களின் பில் அனுப்பப்படும். ஆனால், சென்னையில் இருந்து வரும் வழியில் பெரம்பலூரில் ஒரு சப்டீல ருக்கு சரக்கு இறக்க வேண்டி வந்தால், எங்களின் பில், சப்டீலருக்கு இறக்கி வைக்கும் இடத்தில் இருக்காது. அப் போது, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அபரா தம் விதிக்கின்றனர். திருச்சி கொண்டு வந்து மீண்டும் பெரம்பலூருக்கு அனுப் பவது வீண் செலவு; தேவையற்ற கால தாமதம்.

இதற்காக, 'பில் டூ ஷிப் டூ' என்ற வழிமுறை இருக்கிறது. இதைப் பின்பற்றலாம் என சில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், சிலர் அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காகவே, சரக்கையும் வாகனங்களையும் முடக்கி விடுகின்றனர். பிறகு, 'பில் டூ ஷிப் டூ' நடைமுறை தேவையே இல்லையே. முதலில் ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். அல்லது பில்லிங் வேறு இடம், ஷிப்பிங் வேறு இடத்துக்கு என்ற பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்.

* இ-இன்வாய்ஸ், இவே பில் போடும் போது, நிறுவனம் உள்ள பகுதியில் மின் தடை உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிண்ட் எடுக்க முடியா விட்டால், டிரைவர் மொபைலுக்கு பி.டி.எப்., அனுப்புகிறோம். ரோந்து அதிகாரிகள் (ரோவிங்) காகித பில் கட்டாயம் கேட்டு, அபராதம் விதிக் கின்றனர். இ-இன்வாய்ஸ், இவே பில் ஆகியவை உடனடியாக போர் டலில் அப்டேட் ஆகிவிடும். அதை, அதிகாரிகள் உடனடியாக தங்களின் ஆப்பில் சரிபார்க்க முடியும். இது போன்ற நடைமுறைச் சிக்கல்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது.

டி.மணிகண்டன், திருச்சி.


தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.




முகவரி:





ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in

Advertisement