இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்க; மோடிக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்!

5

ஸ்ரீநகர்: 'பாலஸ்தீனம், லெபனானில் மக்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த, இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.


ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில், உமர் அப்துல்லா பேசியதாவது: பாலஸ்தீனத்திலும் அல்லது லெபனான் நாட்டிலும் மக்களைக் கொல்வதை நிறுத்துமாறு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்.

கொலைகளை நிறுத்துங்க!



இன்று ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பா.ஜ., எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. தங்கள் ஆட்சியில் பா.ஜ., மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் அவர்கள் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸைக் குறை கூறுவார்கள்.


நோ கமென்ட்ஸ்


நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெக்பூபா முப்தி போன்ற சில அரசியல் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை இடைநிறுத்தியது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை' என உமர் அப்துல்லா பதில் அளித்தார்.

Advertisement