லெபானான் மீது தாக்குதல் : நெத்தன்யாகுவிடம் மோடி தொலை பேசியில் ஆலோசனை

8

புதுடில்லி: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலை பேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலின் போது மேற்காசியாவின் தற்போதைய நிலை குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். அப்போது உலகில் பயங்கரவாதத்திற்கு என்றுமே இடமில்லை, மேற்காசியாவில் அமைதி, மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவு தரும். லெபனானில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேண்டும் என்பன குறித்து பிரதமர் மோடி , நெத்தன்யாகுவிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement