கூலி கேட்ட தொழிலாளி கொலை; நால்வருக்கு இரட்டை 'ஆயுள்'

1

பெரம்பலுார்: பால் கறந்த கூலி தொகையை கேட்ட தொழிலாளியை அடித்து தாக்கி கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, பெரம்பலுார் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


பெரம்பலுார் மாவட்டம், தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மணி, 58, பால் கறக்கும் கூலி வேலை செய்தார். இவர், இதே ஊரை சேர்ந்த தனபால், 47, குண்டுபிரபு, 44, குமார், 48, சங்கர், 38, ஆகியோரது மாடுகளுக்கு பால் கறந்து கொடுத்து வந்தார்.


மணி, பால் கறந்த கூலி தொகையை தருமாறு தனபால் உட்பட நான்கு பேரிடம் கேட்டு வற்புறுத்தி வந்தார். இதனால், ஆத்திரடைந்த நால்வரும் மணியை திட்டி, கடுமையாக தாக்கினர். இதில் அவர் இறந்தார்.


இதுகுறித்து, மணி மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரில், பாடாலுார் போலீசார் வன்கொடுமை சட்டம் மற்றும் கொலை வழக்கில் தனபால் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பெரம்பலுார் மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி நேற்று தீர்ப்பளித்தார்.

இதில், மணியை ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கி கொலை செய்த குற்றவாளிகள் தனபால், குமார், சங்கர் மற்றும் குண்டு பிரவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement