மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு சிறை * மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

தேனி: உத்தமபாளையம் அருகே மனைவியை சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை முயன்ற நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தமபாளையம் அம்பாசமுத்திரம் மேற்குத்தெரு ராஜன். இவரது மனைவி ராஜம்மாள். மகள் காளியம்மாள். கணவன் ‛குடி' பழக்கத்தாலும், மனைவியை சந்தேகப்பட்டு பேசி அடிக்கடி தகராறு செய்தார். போலீஸ் ஸ்டேஷனில் மகள் காளியம்மாள் புகார் அளித்தார். இதனால் கணவர், குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்தார். 2012 அக்.2ல் மகள் காளியம்மாள், தாய் ராஜம்மாள் வீட்டிற்குள்ளும், பாட்டி ஆர்வித்தி வெளித்திண்ணையிலும் துாங்கிக் கொண்டிருந்தனர். அக்.3ல் அதிகாலை எனது தந்தை கத்தியுடன் வந்து, ‛என்னுடன் வாழாத நீ எவனுடனும் வாழக்கூடாது' எனக்கூறி துாங்கிக் கொண்டிருந்த தாயின் மீது குத்திவிட்டு தப்பிச் சென்றார். அதில் பலத்த காயமடைந்து தாயார் மயங்கினார். மகள் காளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் ராஜம்மாளை தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் சேர்த்தனர். உத்தமபாளையம் போலீசார ராஜன் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். விசாரணை முடிந்து நேற்று குற்றவாளி ராஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

Advertisement