தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 14 வயதிற்குட்பட்ட கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நடந்தது. இதில் 8 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக கால்பந்து அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு மாநில அளவில் நடந்து வருகிறது. தேனி விளையாட்டு அரங்கில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணித்தேர்வு நேற்று நடந்தது. மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தலா 11 மாணவிகள் வீதம் 88 பேர் தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது. போட்டிகளை பள்ளிகல்வித்துறை உடற்கல்வி இயக்குனர் குபேந்திரன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.போட்டிகள் முடிவில் 18 மாணவிகள் தேர்வு செய்யபட உள்ளனர். இன்று 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கபடி அணி தேர்வு நடக்கிறது.

Advertisement