எல்லையில் அமைதி நிலவுகிறது; இயல்பு நிலை இல்லை; சொல்கிறார் ராணுவ தலைமை தளபதி

2


புதுடில்லி: ''சீன எல்லையில் சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால், இயல்பானதாக இல்லை'', என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.


கடந்த 2020ம் ஆண்டு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், டில்லியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது: தூதரக ரீதியில் நேர்மறையான சிக்னல் வருகிறது. ஆனால், அதனை செயல்படுத்துவது என்பது இரு நாட்டு ராணுவ வீரர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.

எல்லையில், சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால் இயல்பானதாக இல்லை. சென்சிட்டிவ் ஆக இருக்கிறது. அங்கு 2020க்கு முன்பு இருந்த நிலை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறோம். இது வரை, அந்த சூழல் வரவில்லை. அங்கு எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement