ஏர் ேஷா 2024


சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில் நடைபெறுவதையொட்டி அதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.
Latest Tamil News
பகல் 1 மணியளவில் இரண்டு ெஹலிகாப்டரில் வந்த ராணுவ வீரர்கள், ெஹலிகாப்டரில் இருந்து சரசரவென கயிற்றில் இறங்கி எதிரிகளை துப்பாக்கியின் துணையோடு வேட்டையாடுவதோடு நிகழ்ச்சி துவங்கியது.
Latest Tamil News
அதன்பிறகு ரபேல்,தேஜஸ் உள்ளீட்ட அனைத்து வகையான போர் விமானங்களும் தத்தம் சாகசங்களைக் காட்டின.
Latest Tamil News
இரண்டு விமானங்கள் வேகமாக பறப்பது போல தெரியும், சற்றே உற்றுப்பார்த்தால்தான் ஒரே வேகத்தில் ஒரு போர் விமானம் நேராகவும் இன்னோரு விமானம் தலைகீழாகவும் பறந்து செல்வதை கவனிக்கமுடியும்.
Latest Tamil News
விமானப்படையின் பழமையான விமானம் ஒன்று நான் இப்பவும் திறமைசாலி என்று நிருபீப்பது போல விதம் விதமாக பறந்தது.
ஒரு போர் விமானம் வானில் வண்ணப்புகையை கக்கியது என்றால் இன்னோரு போர் விமானம் வானில் புள்ளி இல்லாமல் கோலம் வரைந்தது.மூன்று போர் விமானங்கள் வண்ண புகையை கக்கியபடி சென்றன, அந்தப் புகை வானில் விரிந்த போதுதான் அது நம் தேசிய கொடியின் சின்னத்தில் இருப்பது தெரிந்தது.
Latest Tamil News
ஐந்து ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய சாகசங்கள்தான் விழிகளை அதிகம் வியப்பில் விரியச்செய்தது,வானத்தில் ஒன்றை ஒன்று மோதிக்கொள்வது போல எதிரெதிர் திசையில் பறந்துவந்து கண்இமைக்கும் நேரத்தில் ஒன்றை ஒன்று நேர்தியாக கடந்து சென்றது.

ஆகவே வாய்ப்புள்ளவர்கள் நமது விமானப்படையின் பெருமையை அருமையை திறமையை பார்த்து ரசிக்க மறக்காமல் வரும் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துவிடவும்.,அனுமதி இலவசம்.

-எல்.முருகராஜ்.

Advertisement