பருவமழை முன்னேற்பாடு கமிஷனர் ஆலோசனை

சென்னை, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், அதிகாரிகளிடம், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:

மழைக்காலத்தில் நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சார வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணிகளை விரைந்து செய்யும் வகையில், அதிகாரிகளுக்கு கையடக்க கணினி எனும் 'டேப்' வழங்கப்படும்.

மண்டல அலுவலகங்களில், அனைத்து வசதிகள் கொண்ட இடமாக மாற்ற வேண்டும். நீர்வளத்துறை, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement