மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

கடலுார் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, துணைத் தலைவர் ரிஸ்வானா பர்வீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

கடலுார் சிப்காட் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 29 கம்பெனிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு புதியதாக கம்பெனி கட்டுவதற்காக 4,750 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளன. இதனால் இயற்கை பேரிடர் பாதிக்கும் பகுதியாக மாறும் நிலை உள்ளது. அங்கு மரங்கள் இதன்பின் வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பாதிரிக்குப்பம், அரிசிபெரியாங்குப்பம், குடிகாடு, காரைக்காடு, பெரிய கங்கணாங்குப்பம் போன்ற பல்வேறு பகுதிகள் கடலுார் மாநகராட்சியுடன் இணைக்க போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை.

என்.எல்.சி., சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் கவுனிசிலர்களுக்கு ஐந்து வீடுகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Advertisement