இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு சிவப்பு கம்பள வரவேற்பா ?: பாகிஸ்தானுக்கு கண்டனம்

8

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான , முஸ்லிம் மத பிரசாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் நாயக், இவர் பணமோசடி, வெறுப்பு பிரசாரம், பயங்கரவாதத்தை துாண்டியது என பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதையறிந்து 2016ல், நாட்டை விட்டு வெளியேறி மலேஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அழைப்பின் பேரில் 15 நாள் பயணமாக ஜாகிர் நாயக் பாகிஸ்தான் சென்றடைந்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜாகிர் நாயக்கை தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிடார்.

அதில் ஜாகிர் நாயக்கை பாகிஸ்தானின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் ராணா மசூத் மற்றும் உயரதிகாரிகள் இஸ்லாமாபாத் விமானம் நிலையம் வரை வந்து வரவேற்றதுடன், வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் மரபுபடி பலத்த பாதுகாப்புடன் வரவேற்று அழைத்துச்சென்றனர். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜாகிர் நாயக்கின் பாகிஸ்தான் பயணத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு பாகிஸ்தான் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருப்பது சரியல்ல என தெரிவித்துள்ளது.

Advertisement