இஸ்ரேல் பிரதமருக்கு மோடி யூத புத்தாண்டு வாழ்த்து

புதுடில்லி: யூத புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் யூதர்கள் வசிக்கின்றனர். யூத புத்தாண்டு தினம் ' ரோஷ் ஹசானாக்' என்ற தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனயாகுவிற்கு பிரதமர் மோடி யூத புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தார். இது தொடர்பாக மோடி தனது ‛எக்ஸ்‛ வலைதளத்தில் கூறியது, எனது நண்பர் நெத்தன்யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும், உலகில் வாழும் யூதர்களும் , யூத புத்தாண்டு எனும் ரோஷ் ஹசானாக் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்புத்தாண்டு, அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement