துவங்குகிறது 'குளோபல்' செஸ்

லண்டன்: உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் குளோபல் செஸ் லீக் தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து ஐ.பி.எல்., பாணியில் ஆறு அணிகள் பங்கேற்கும் 'குளோபல் செஸ் லீக்' தொடரை நடத்துகின்றன. முதல் சீசனில் திரிவேணி அணி சாம்பியன் ஆனது.
ஒவ்வொரு அணியிலும் ஒரு நட்சத்திர வீரர், இரண்டு கிராண்ட்மாஸ்டர்ஸ், இரு வீராங்கனைகள், 21 வயதுக்குட்பட் ஒருவர் என 6 பேர் இடம் பெறுவர். போட்டி ரவுண்டு ராபின் முறையில் 20 நிமிடம் மட்டும் நடக்கும்.
கூடுதல் நேரம் தரப்படாது என்பதால், நெருக்கடியில், வேகமாக திட்டமிட்டு விளையாட வேண்டும். மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும்.
உலகின் 'நம்பர்-1' வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் கேப்டனாக உள்ள ஆல்பைன் அணியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா இடம் பெற்றுள்ளார். ஐந்துமுறை உலக சாம்பியன், இந்தியாவின் ஆனந்த் கேப்டனாக உள்ள காங்கஸ் அணியில் அர்ஜுன், வைஷாலி விளையாடுகின்றனர். ஹரிகா, ஹம்பி, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர் மும்பை மாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடுகின்றனர்.
இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 4.20 கோடி கிடைக்கும்.

Advertisement