கிராம சபை கூட்டம்: கல்மண்டபத்தில் கலெக்டர் பங்கேற்பு

நெட்டப்பாக்கம் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கொம்யூன் பஞ்சாயத்துகள் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கல்மண்டபத்தில் நடந்தகூட்டத்திற்கு, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். குடிநீர்,சாலை வசதி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம்:அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில்அரியாங்குப்பம், பி.சி.பி., நகர் சமுதாய நலக்கூடம், காக்கையாந்தோப்பு மாரியம்மன் கோவில் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், மணவெளி புருேஷாத்தம்மன் சமுதாய நலக்கூடம், நோணாங்குப்பம், துவக்கப்பள்ளி அருகில் என 14 இடங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருக்கனுார்: திருக்கனுாரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்று , கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினார்.

இதில், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனாஉள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சாயத்து கிராமங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசுகள் வழங்கினார்.

வில்லியனுார்:வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர், அகரம், குருமாம்பேட், வில்லியனுார், சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, கணுவாப்பேட்டை, கோட்டைமேடு, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், கீழ்சாத்தமங்கலம், சிவராந்தம், அரியூர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் அந்தந்த பகுதி கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் நடந்தது.

பொதுப்பணித்துறை, மின் துறை, போலீஸ், வட்டார வளர்ச்சி அலுவலகம்உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் பங்கேற்று கிராம வளர்ச்சி திட்டத்திற்கு, ஆலோசனைகள் வழங்கினர்.

வில்லியனுார் (மத்தியம்) பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, மேலாளர் குப்பன், இளநிலை பொறியாளர்கள் அரங்கமன்னார்,முர்ரே சத்யநாராயணா,செயல் அதிகாரி ஞானசேகர், ஆசிரியர்கள் திருமாவளவன், ரவி, ஊர் முக்கிய பிரமுகர்கள் பார்த்தசாரதி, கலியமுருகன், அருள், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.துாய்மையே சேவை இரு வார விழாவையொட்டி நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாகூர்:பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட் 14 கிராம பஞ்சாயத்துகளிலும் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

உள்ளாட்சி, சுகாதாரம், போலீஸ், வருவாய், மின்சார துறை தவிர்த்து பிற துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பொதுமக்களின் பங்களிப்பும் மிக குறைவாக காணப்பட்டது. இதனால் கிராம சபை கூட்டம் பெயரளவிற்கே நடந்தது.

Advertisement