மதுவிலக்கு மகளிர் மாநாடு தி.மு.க., - வி.சி.க., நாடகம்; எச்.ராஜா பேட்டி

திருநெல்வேலி: 'மது விலக்கு மகளிர் மாநாடு நடத்தியது தி.மு.க.,- விடுதலை சிறுத்தை கட்சிகள் போட்ட நாடகம்' என்று நெல்லையில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்


திருநெல்வேலி ஜங்ஷன் உடையார் பட்டியில் பா.ஜ., அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் கூறியதாவது:


தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்காக 63, 246 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் வரும் 2027ம் ஆண்டு முடிவடையும் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் முடிவடையும் இதற்காக நாங்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.


கடந்த இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது இந்த இந்த மாநாட்டை நடத்தி ஒரு மிகப்பெரிய நாடகத்தை விடுதலை சிறுத்தை கட்சி- திமுக நடத்தியுள்ளது. மது கொள்கை என்பது மாநில அரசு கையில் உள்ளது மாநில அரசு வேண்டுமானால் பூரண மதுவிலக்கை கொண்டு வரலாம்.


கடந்தாண்டு சாராயத்தால் 28 பேர் உயிரிழந்தார்கள் இதே போல் கள்ளக்குறிச்சியில் 68 பேர் உயிரிழந்து உள்ளார்கள் இது ஒரு வெட்கக்கேடு 1700 கோடி ரூபாய் மது மூலமாக வருமானம் கிடைத்துள்ளதாகவும் 54,000 கோடி ரூபாய் மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து வருவது வெட்கமாக உள்ளது.


மக்களை திசை திருப்புவதற்காக இது போன்ற மாநாடு நடத்தி நாடகத்தை நடத்தி உள்ளார்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநாட்டில் பெண் காவலரை அந்தக் கட்சியில் உள்ளவர்களே அடித்து உதைக்கிறார்கள். பலர் அரசு மதுபானக் கடைக்கு சென்று குடித்துவிட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.


முன்னாள் கவர்னர் தமிழிசை பற்றி திருமாவளவன் தரக்குறைவாக பேசி உள்ளார். இது போன்ற பெண்களை கொச்சைப்படுத்துவது சரி இல்லை. திமுக ஒரு தீய சக்தி அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் இந்த மாநாடு மூலமாக விடுதலை சிறுத்தைக்கு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ராஜாஜி இருக்கும்போது மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தார் ஆனால் தமிழக மக்களை குடிக்க வைத்தது கருணாநிதி.


பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. அதேபோல தமிழகத்தில் ஆசிரியர்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது அவர்களுக்கான சம்பளம் கூட போடவில்லை. திமுக குடும்பத்தில் உள்ளவர்கள் நடத்துகின்ற பள்ளியில் இந்தி உள்ளிட்ட மூன்று மொழி கொள்கை பாடம் நடத்தப்பட்டு வருகிறது.


அதேபோல அவரது கட்சியில் உள்ள கவுன்சிலர் கூட மும்மொழி கொள்கை உள்ள பள்ளியில் அவரது குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் ஆனால் தமிழக மக்களுக்கு மட்டும் இரு மொழிக் கொள்கை ஸ்டாலின் மகள் நடத்துகின்ற பள்ளியில் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிக் கொள்கை கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.


தி.மு.க., கட்சியில் உள்ளவர்கள் நடத்துகின்ற பள்ளிகளிலும் மூன்று மொழி கொள்கை பாடம் கற்பித்து கொடுக்கப்படுகிறது. அமைச்சர் சேகர்பாபுவின் உறவினர்கள் பல கோவில் நிலங்களை அபகரித்து வைத்துள்ளார்கள் இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் பலமுறை கேட்டு வருகிறேன் கோவில் பணத்தை திமுக அரசு திருடிக் கொண்டு வருகிறது.


பார்லி., தேர்தலுக்கு முன் துணை முதல்வராக தற்போது பதவி வைத்து கொண்டிருக்கும் உதயநிதி, மகளிர் உரிமை தொகை என்பது தேர்தல் முடிந்த உடனேயே அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வந்துவிடும் என தெரிவித்தார். தற்போது தேர்தல் முடிந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர் வாய் திறக்கவில்லை. இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Advertisement