தங்கம் வென்றது இந்தியா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.

பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ரேபிட்-பயர் பிஸ்டல்' பிரிவில் முகேஷ் நெலவல்லி (579.15 புள்ளி), ராஜ்வர்தன் பாட்டீல் (579.17), ஹர்சிமர் சிங் ரத்தா (564.10) அடங்கிய இந்திய அணி 1722.42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ராஜ்வர்தன் பாட்டீல் (579.17), முகேஷ் நெலவல்லி (579.15) முறையே 3, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் ராஜ்வர்தன் (17 புள்ளி), முகேஷ் (10) முறையே 4, 5வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவில் இந்தியாவின் பரிக் ஷித் சிங் பிரார் (623.0 புள்ளி), ஷிவேந்திர பகதுார் சிங் (618.4), வேதாந்த் நிதின் (613.2) முறையே 5, 14, 24வது இடம் பிடித்தனர்.
இதுவரை 11 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 16 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement