விருது பெற்ற நெசவாளர்கள் காஞ்சி கலெக்டரிடம் வாழ்த்து

காஞ்சிபுரம்:கைத்தறி துறையில், 2023ம் ஆண்டிற்கு சிறந்த நெசவாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு ஆகியவற்றை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வழங்கினார்.

காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகர் என்பவர் நெய்த பட்டு சேலை, மாநில அளவிளான முதல் பரிசாக தேர்வு செய்யப்பட்டது. அதே சங்கத்தின் உறுப்பினர் புகழேந்தி என்பவரால் நெய்யப்பட்ட பட்டு சேலைக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த பட்டு சேலை வடிவமைப்புக்கு, முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் குமரவேல் என்பவருக்கு முதல் பரிசும், அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர் பார்த்திபன் என்பவருக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன.

விருதுக்கு தேர்வான இவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களும், ரொக்க பரிசுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், விருது பெற்ற நெசவாளர்கள், பணியாளர்கள் நேற்று காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின்போது, கைத்தறி துறை துணை இயக்குனர் மணிமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement