பழச்செடி தொகுப்பு விற்பனை தோட்டக்கலைத் துறை மவுனம்

கம்பம்: பழச் செடிகள் மற்றும் காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க பழச்செடி தொகுப்பு எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

பழச் செடிகள், காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பழச்செடிகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க பழச்செடி தொகுப்பு கடந்தாண்டு வழங்கப்பட்டது.

இதில் மா, எலுமிச்சை, கொய்யா, பெருநெல்லி, சீத்தா செடிகள் இருந்தது.

ஒரு தொகுப்பின் விலை ரூ.150 என்றும், விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.112.50 பைசா போக மீதி ரூ.37.50 செலுத்தி பெற்று கொள்ளலாம் என அறிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் 3 ஊராட்சிகளுக்கு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 300 தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்து, கம்பம், சின்னமனுார் வட்டாரத்தில் எரக்கநாயக்கனுார்,பொட்டிப்புரம், கன்னிசேர்வை பட்டி ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 24 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் 300 பழச் செடி தொகுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தாண்டு இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

பழச்செடிகள் தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement