50 சதவீத மானியத்தில் பசு வழங்கும் திட்டம் அறிமுகம்

கம்பம்: ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசு மாடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு பசு மாடு வழங்கப்படும்.

தேனீ மற்றும் மண்புழு வளர்க்க தேவையான உபகரணங்கள், பசுவிற்கு தேவையான தீவனம் வளர்க்க விதைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் சின்னமனுார், போடி, பெரியகுளம் வட்டாரங்களுக்கு இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது .

மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான இத் திட்டத்தில் பயனாளி ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும். 50 சதவீதம் மானியமாகும். விவசாயிகளின் பொருளாதார ஸ்திர தன்மைக் கென இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 60 பேர்களுக்கு பசு மாடுகள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

Advertisement