பனை விதை நடவு பயிற்சி முகாம்

போடி: போடி அருகே சிலமலையில் பசுமை பங்காளர் அமைப்பு சார்பில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கான பனை விதை நடவு பயிற்சி முகாம் நடந்தது.

ராசிங்கபுரத்தில் ஜமீன்தாரணி காமலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி தலைமையில் நடந்தது. என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன், பள்ளி தலைவர் ராஜகோபால், செயலாளர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முகாமில் அறிவுத் திருக்கோயில் மன வளக்கலை பேராசிரியர் ஜீவானந்தம் யோகா பயிற்சி வழங்கினார்.

பசுமை பங்காளர் அமைப்பு சார்பில் சிலமலையில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பனை விதை நடவு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. தி கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளர் சுந்தரம், போடி கனரா வங்கி மேலாளர் பூபாலன், பனைமுருகன் பனை விதை நடவு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். வடத்தான்குளம் சுற்றி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம் பனை விதைகள் நடப்பட்டன. பயிற்சி முகாமில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கருப்பையா உட்பட 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement