சர்வதேச பொதுப்பள்ளியில் கால்பந்து 'லா லீகா' அகடாமி துவக்கம்

தேவதானப்பட்டி: கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் 'லா லீகா' கால்பந்து அகடாமி மையம் துவங்கப்பட்டது.

தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில், ஸ்பெயின் நாட்டில் கால்பந்நு விளையாட்டில் பிரபலமான 'லா லீகா' அகடாமி மையம் துவங்கப்பட்டது. பள்ளி தலைவர் செந்தில்குமார் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.

தாளாளர் குமரேஷ், இந்திய ஆன்ட்ராக் நிறுவனம் தலைவர் கார்த்திக் ஆறுமுகம், மாநில தலைவர் கோகுல் பிரசாந்த் பங்கேற்றனர். லா லீகா அகடாமி இந்திய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் முன்னணி பயிற்சியாளர் மிகுவேல்காசல், மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ டி -சர்ட்டை வெளியிட்டு, கால்பந்து மாணவர்களுக்கு பயிற்சியை துவங்கினார்.

செந்தில்குமார் சுப்ரமணியன் கூறுகையில், 'இங்கு லா லீகா அகடாமி துவங்குவதால் தேனி மாவட்ட மாணவர்கள் சர்வதேச தரத்திலான விளையாட்டு பயிற்சியை பெற வாய்ப்பாக அமையும்', என்றார். மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.-

Advertisement