குளோபல் செஸ்: ஆனந்த் 'டிரா'

லண்டன்: லண்டனில், 'குளோபல் செஸ் லீக்' தொடர் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. நான்காவது சுற்றுப் போட்டியில் கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், அலாஸ்கன் நைட்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் (கங்காஸ்), அனிஷ் கிரி (அலாஸ்கன்) மோதினர். ஆனந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 59வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

அர்ஜுன் எரிகைசி (கங்காஸ்), நோடிர்பெக் (அலாஸ்கன்) மோதிய மற்றொரு போட்டி 37வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது. கங்காஸ் அணியின் வைஷாலி தோல்வியடைந்தார். நிஹால் சரின் (அலாஸ்கன்), முர்சின் (கங்காஸ்) மோதிய போட்டி 66வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் அலாஸ்கன் அணி 12-3 என்ற கணக்கில் வரிசையாக 4வது வெற்றியை பதிவு செய்தது. முதல் மூன்று போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், அமெரிக்கன் காம்பிட்ஸ் அணிகளை தோற்கடித்தது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அலாஸ்கன் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement